தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில்
சங்கரன் கோவில் ஊரகம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா சங்கர் நகர் 2ஆம் தெருவில் உள்ள சி எஸ் எம் எஸ் திருமண மண்டபத்தில் வைத்து நடந்தது. குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் நர்மதா தலைமை வகித்தார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு நூற்றுக்கணக்கான கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருள்களை வழங்கி பேசினார். தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஐந்து வகையான சாப்பாடு பரிமாறப்பட்டது.நிகழ்ச்சியில் மாவட்ட
பொருளாளர் சரவணன்,
நகரச்செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் பெரியதுரை, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் உதயகுமார், துணை அமைப்பாளர் வீரமணி, ஊரக குழந்தை வளர்ச்சி திட்ட கண்காணிப்பாளர் ஜெயகணபதி மேற்பார்வையாளர்கள் சுசீலா,குருதேவகி,
மற்றும் ஜெயக்குமார் பாலாஜி மாரி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் முத்துப்பாண்டி நன்றி கூறினார்.