அரியலூர்,ஜூன் 30:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடை வீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், மீன்சுருட்டி கடைவீதியில் உள்ள குகை வழிச் சாலை, அணுகுச் சாலை மற்றும் வாழ்முனி கோயில் அருகேயுள்ள மழைநீர் வடிக்கால் மதகு ஆகியவற்றை உடனடியாக சீர் செய்ய வேண்டும். பள்ளிச் செல்லும் மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலர் மணிவண்ணன் தலைமை வகித்தார்.நிர்வாகிகள் ராஜா பெரியசாமி, நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் ராமநாதன், முன்னாள் மாவட்டச் செயலர் உலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கை விளக்க உரையாற்றினர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.