தஞ்சாவூர் ஆகஸ்ட் 22
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத் தில் மனித வள மேம்பாட்டு மையம் சார்பில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன நல்கையுடன் தமிழ் மொழி இலக்கிய இலக்கண நூல்களின் மொழிபெயர்ப்புகள் என்கின்ற 14நாட்கள் புத்தொளிப் பயிற்சி வகுப்பு தொடங்கியது.
இதன் தொடக்க விழாவிற்கு துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமை வகித்தார். வளர்தமிழ் புல முதன்மையர் குறிஞ்சிவேந்தன் வாழ்த்துரையாற்றினார். மொழி பெயர்ப்பு துறை முன்னாள் தலைவர் பழனி அரங்கசாமி சிறப்பு ரையாற்றினார். இப்பயிற்சியில் 33 பேராசிரியர்கள் கலந்து கொண் டனர்.
முன்னதாக பதிவாளர் (பொ) தியாகராஜன் அனைவரையும் வரவேற்றார் .நிறைவாக மனித வள மேம்பாட்டு மைய இயக்குனர் ராஜேஷ் நன்றி கூறினார்.