கம்பம்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கவரா நாயுடு சங்கத்தின் சார்பில் 2024 ஆம் ஆண்டு 10,11,12 ஆகிய வகுப்புகளில் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசும் ரொக்க தொகையும் வழங்கி ஊக்கவித்தனர். இந்த விழா சுருளிப்பட்டி கவரா நாயுடு சங்க கட்டிடத்தில் 17 ஆம் தேதி வெகு விமர்சையாக துவங்கப்பட்டது. தேனி மாவட்ட சங்க தலைவர் பாலகுரு,மாவட்டச் செயலாளர் சுப்புராம்,மாவட்டத் துணைத் தலைவர்கள் சங்கராபுரம் மற்றும் சுருளிப்பட்டி ஆர். கணேசன் மாவட்ட துணை தலைவர் வைகை முருகன் இளைஞரணி விஜயகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். விழா முடிவில் சுருளிப்பட்டி சங்க செயலாளர் நாகய சுவாமி நன்றி உரை ஆற்றினார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளைசங்கமம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் சுரேஷ் சிறப்பாக செய்திருந்தார். இதில் சுருளிப்பட்டி கவரா நாயுடு சங்க தலைவர் செயலாளர் பொருளாளர் செயற்குழு உறுப்பினர்கள் மகளிர் அணி நிர்வாகிகள்,மாணவ மாணவிகள், பெற்றோர்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.