அரியலூர், மே: 22
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவுத் தினத்தையொட்டி அரியலூரில் அவரது படத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. அரியலூர் செட்டி ஏரிக்கரையிலுள்ள காமராஜர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி படத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ஆ.சங்கர், முன்னாள் மூத்தத் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன், நகர தலைவர் மா.மு.சிவகுமார், வட்டாரத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், கர்ணன், திருநாவுக்கரசு, கங்காதுரை, அழகானந்தம், ஜெயங்கொண்டம் நகர் தலைவர் அறிவழகன், மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் குருசாமி, மாவட்ட பொருளாளர் மனோகரன், பூண்டி சந்தானம், மாவட்ட பொதுச் செயலர் பிரஸ் செந்தில் மற்றும் ரவிச்சந்திரன் சண்முகம் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.