கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் அகரம் கூட்ரோடு பேருந்து நிலையம் அருகில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8.ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம் எல் ஏ தலைமை தாங்கினார். காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணாரி கிழக்கு இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் எம். எஸ்.பிரபாகரன்,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கார்த்திகேயன் .
கிழக்கு மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் ஜி ரவிச்சந்திரன் .தென்னரசு, நாகோஜணஹள்ளி போரூர் கழகச் செயலாளர் அண்ணாதுரை . முன்னால் கூட்டுறவு சங்க தலைவர் பண்ணந்தூர் பழனிசாமி
ஒன்றிய அவை தலைவர் வடிவேலன் .ஒன்றிய இணைச் செயலாளர முனிரத்தினம். குணசேகரன், ஒன்றிய துணைச் செயலாளர் சித்ரா முருகேசன், சுரேந்தர், மாவட்ட பிரதிநிதிகள் மஞ்சுநாதன், முருகையான், ஒன்றிய பொருளாளர் ராமன்.
அம்மா பேரவை ஒன்றுச் செயலாளர் ரவிச்சந்திரன் , இளைஞரணி செயலாளர் மகேஸ்வரன் . ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர் இறுதியாக அகரம் கருப்பண்ணன் நன்றியுரை வழங்கினார் மேலும் தொண்டர்களும் ,ஊர் பொதுமக்களும் சேர்ந்து ஜெயலலிதாவின் நினைவு தினத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கப்படும் என்று உறுதிமொழி ஏற்றனர்.