நாகர்கோவில் ஆக 9
குமரி மாவட்டம் நாகர்கோவிலில்
அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியம் மற்றும் நிலுவை தொகையினை வழங்க கேட்டும், கோவை, திண்டுங்கல் மாவட்டங்க ளுக்கு மட்டும் வழங்கி விட்டு தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை புறக்கணித்து வரும் தமிழக அரசை கண்டித்தும், அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த பேராசிரியர்கள் இந்து கல்லூரியில் மூட்டா பிரிவை சேர்ந்த அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு பேராசியர்கள் ஆகியோர் 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து 3 நாட்கள் தமிழக அரசை கண்டித்து கருப்பு ஆடை அணிந்து கண்டன காத்திருப்பு போராட்டதில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், மதுரை காமராஜர், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா மற்றும் அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் ஆகியவை சார்பில் கல்லூரி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடக்கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் ஆகியோரின் கவனம் ஈர்க்கும் வகையில் மாநிலம் தழுவிய கருப்பு ஆடை அணிந்து கண்டன காத்திருப்பு போராட்டம் ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை அனைத்து கல்லூரி கிளைகளிலும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்றைய தினம் நாகர்கோவில் இந்து கல்லூரி வளாகத்தில் கல்லூரி பேராசிரியர்கள் தங்களுடைய கோரிக்கைகள் மீது அரசு கவனம் செலுத்தி உடனடியாக நிறைவேற்றி தர கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அரசுக்கு வைத்துள்ள கோரிக்கைகள் பின்வருமாறு :-
அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணிமேம்பாடு ஊதியம் மற்றும் நிலுவைத்தொகையினை உடனடியாக வழங்கவேண்டும்.
யுஜிசி நெறிமுறைகளின் படி கல்லூரி ஆசிரியர்களுக்கு எம்.பில் மற்றும் பிஎச்டி பட்டத்திற்கான ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும், கல்லூரி ஆசிரியர்களுக்கு பேராசிரியர் பதவிக்கான கல்லூரிக் கல்வி இயக்குனரின் செயல் முறை ஆணையினை உடனடியாக வழங்க வேண்டும், யு ஜி சி அறிவித்துள்ளபடி புத்தொளி / புத்தாக்க பயிற்சிக்கான கால அவகாசத்தை நீடித்து வழங்கிட வேண்டும், ஆசிரியர்களின் இணை பேராசிரியர் பணி மேம்பாட்டிற்கு பி எச் டி கட்டாயம் என்பதை தளர்த்திட வேண்டும், தமிழ் கல்வித் தகுதி தேர்வு பல்கலைக்கழகங்களில் முடித்திருப்பவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும், அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு கணக்கு தேர்வில் இருந்து விலக்கு அளித்திட வேண்டும்
கல்லூரி நிர்வாகத்தின் ஆசிரியர் விரோத போக்கினை தடுத்து நிறுத்தவேண்டும்.புதிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்திட வேண்டும் என்பதான ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு இதற்கு மேலும் கண்டு கொள்ளாவிட்டால் போராட்டங்கள் மேலும் தீவிரப்படுத்தபடும் என்றும் போராட்ட குழுவினர் அரசுக்கு எச்சரிக்கை விடுவித்தனர். இந்தப் போராட்டத்தில் மத்திய மூட்டா இணை பொதுச் செயலாளர் ஷைலா குமாரி, பொருளாளர் ராஜ ஜெயசேகர், மூட்டா இந்துக் கல்லூரி
தலைவர் ஐயப்பன்,
செயலாளர் மகேஷ்.
பொருளாளர் சுப்பையா மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானார் கலந்து கொண்டனர்.