ஈரோடு மார்ச் 11
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவியர்கள் பயனடையும் வகையில், அந்தியூர் அரசு (பிற்பட்டோர் நலம்) கல்லூரி மாணவியர் விடுதி துவங்கிட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்தியூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள மூங்கில்பட்டி அரசு (மிக பிற்பட்டோர் நலம்) பள்ளி மாணவியர் விடுதியில், அந்தியூர் அரசு கல்லூரியினைச் சேர்ந்த 30 மாணவியர்களும், தொழிற்பயிற்சி கல்வி நிலையத்தை சேர்ந்த 2 மாணவியர்களும் தங்கியுள்ளனர். எனவே இவ்விடுதி முதல் தளத்தில் அந்தியூர் கல்லூரி மாணவியர் விடுதியினை தற்காலிகமாக துவங்கிட பிற்படுத்தப்பட்டோர் நலம் ஆணையர் அனுமதியளித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் மூங்கில்பட்டி அரசு மிகபப்பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவியர் விடுதி முதல் தளத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி அந்தியூர் அரசு அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவியர்கள் தங்கு வகையில் விடுதியினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இவ்விடுதியில் தற்பொழுது 18 மாணவியர் தங்கி பயின்று வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் சிவகிரி, சென்னிமலை, வெள்ளோடு, கோபிசெட்டிபாளையம், நம்பியூர், தேவர்மலை, தாளவாடி ஆகிய அரசு ஆண்கள் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள் மற்றும் அவல்பூந்துறை, கொடுமுடி, சிவகிரி, பெருந்துறை, அத்தாணி ஆகிய அரசு பெண்கள் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் 514 மாணவ, மாணவியர்களும், அரச்சலூர்,
அந்தியூர், குருரெட்டியூர் ஆகிய ஆண்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள் மற்றும் பவானி, சத்தியமங்கலம், மூங்கில்பட்டி அரசு பெண்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் 256 மாணவ, மாணவியர்களும், பங்களாபுதூர் சீர்மரபினர் நல விடுதியில் 263 மாணவியர்களும் தங்கியுள்ளனர். மேலும் கோபி, அந்தியூர், வேலம்பாளையம், வில்லரசம்பட்டி, பெருந்துறை, சத்தியமங்கலம், சித்தோடு, புஞ்செய்புளியம்பட்டி, திட்டமலை, மொடக்குறிச்சி ஆகிய அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளில் 662 கல்லூரி மாணவ, மாணவியர்களும் தங்கியுள்ளனர்.
அந்தியூர் அரசு அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவியர்கள் தங்கு வகையில் விடுதியில் தங்கி பயிலும் மாணவி உமாமகேஸ்வரி நிறைந்த மனதுடன்
தெரிவித்ததாவது
நான் அந்தியூர் கலை மற்றும் அறிவியல் கல்லாரியில் பி.எஸ்சி (இளங்கலை
கணிதம்) இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறேன். எனது பெற்றோர் மலை பகுதியில் அவ்வப்போது கிடைக்கும் கூலி வேலை செய்து வருகின்றனர். எனக்கு ஒரு அக்கா மற்றும் ஒரு தம்பி உள்ளனர். நாங்கள் மலைகிராம பகுதியில் வசித்து வருவதால், நாள்தோறும் கல்லூரிக்கு பேருந்தில் சென்று வீட்டிற்கு வருவது சிரமமாக இருந்தது. மேலும் மலைப்பகுதியில் பேருந்து வசதி அதிகம் இல்லாத காரணத்தால் விடுதியில் தங்கி பயில வேண்டிய சூழ்நிலை இருந்தது. நான் மூங்கில்பட்டி அரசு பெண்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் தங்கி பயின்று வந்தேன். தற்பொழுது, அந்தியூர் அரசு அரசு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் கல்லூரி மாணவியர்களுகென தனியாக விடுதி துவங்கப்பட்டுள்ளது. நான் தற்பொழுது கல்லூரி மாணவியர்கள் விடுதியில் தங்கியுள்ளேன். எனக்கு இங்கு அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. பாடங்களை பயிலுவதற்கும் தகுந்த சூழ்நிலை உள்ளதால், பயில்வது எளிதாக உள்ளது. எங்களை போன்ற மலைகிராமத்தில் வசிக்கும் ஏழை, எளிய மாணவியர்களும் உயர் கல்வியில் மேம்பட வேண்டும் என்ற உயரிய நோக்கில் கல்லூரி மாணவியர்கள் விடுதியினை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நிறைந்த மனதுடன் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.