திருவட்டாறு, பிப்- 12
குமரி மாவட்டம் திருவட்டாறு அருகே உள்ள கொக்கோட்டு மூலை என்ற இடத்தை சேர்ந்தவர் அர்ஜுனன் மகன் அஜித் (19). இவர் குலசேகரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலி டெக்கனிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக யாருடனும் அதிகம் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவதினம் அஜித் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலையில் அஜித் பரிதாபமாக உயிரிழந்தார். இதை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது குறித்து திருவட்டாறு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.