லெவிஞ்சிபுரம் கேப் பொறியியல் கல்லூரியில் இயேசுவின் சிலுவை பாடு இசை நாடகம்.
தென்தாமரைகுளம்., ஏப். 1.
அஞ்சு கிராமத்தை அடுத்த நெல்லை மாவட்டம் லெவிஞ்சிபுரம் பகுதியில் இயங்கி வரும் கேப் பொறியியல் கல்லூரியில் கொரியன் கலை குழுவினரின் இயேசுவின் சிலுவை பாடுகள் குறித்த இசை நாடகம் நடை பெற்றது. இதற்காக 50 க்கும் மேட்பட்ட கொரியன் கலைஞர்கள் இரண்டு வாரமாக கல்லூரியில் தங்கி பயிற்சி மேற்கொண்டனர். விழாவானது கல்லூரியின் நிறுவனர் பொறியாளர் கிருஷ்ணப் பிள்ளையின் வழிகாட்டலின் படி, இணை நிறுவனர் டாக்டர். கே. வி. அய்யப்ப கார்த்திக் தலைமையில் கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி இன்ஜினியர் ஜே. பி. ரெனின் முன்னிலையில் நடைபெற்றது. முதல்வர் டாக்டர் தேவ் ஆர். நியூலின் விழாவின் ஏற்படுகள் செய்து இருந்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர் நாகேந்திரன், மகாகவி பாரதி கல்லூரியின் முதல்வர் டாக்டர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவை டாக்டர். ரமேஷ் குமார், டாக்டர் அருண்பிரசாத், விக்னேஷ், சுந்தர் ஆகியோர்கள் சிறப்பாக வழி நடத்தினர். கொரியன் கலைஞர்கள் நாடகம் மூலம் விழாவை சி றப்பித்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.