முதுகுளத்தூரில்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக மருத்துவ அணி சார்பில் மாபெரும் மருத்துவ முகாம்
கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்!
ராமநாதபுரம், டிச.2-
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக மருத்துவ அணி சார்பில் மாபெரும்
இலவச பொது மருத்துவ முகாம் முதுகுளத்தூரில் நடந்தது.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக மருத்துவ அணி சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவ சிகிச்சை முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம் முதுகுளத்தூர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மாபெரும் மருத்துவ முகாமை
கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்த சிறப்பு பொது மருத்துவ முகாமில் காவேரி, அரவிந்த், மீனாட்சி மிஷன், ஹர்ஷினி, ஜிகேஎம் போன்ற தமிழகத்தில் பிரபலமான மருத்துவமனைகள் பங்கேற்று தங்களது மருத்துவமனையில் உள்ள பிரபல டாக்டர்கள், சிறப்பு நிபுணர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினரை கொண்டு கண், பல்
நுரையீரல், சர்க்கரை நோய் சிகிச்சை, மகப்பேறு நலம்,
எலும்பு முறிவு தொடர்பாக இசிஜி, ரத்த பரிசோதனை செய்து 23 ஆண், 14 பெண் டாக்டர்கள் கொண்ட மருத்துவ நிபுணர்கள் தலைமையில் நூற்று கணக்கான நர்ஸ் மற்றும் மருத்துவ குழுவினர் முகாமில் பல்லாயிரக்கணக்கானோருக்கு பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். கண் ஆப்ரேஷன் மற்றும் உயர் சிகிச்சை பெற வேண்டியவர்கள் தேர்வு செய்து அவர்களை மதுரைக்கு அழைத்து சென்று உரிய சிகிச்சை முற்றிலும் இலவசமாக வழங்கினர்.
மருத்துவ முகாமில் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
முகாமில் சிகிச்சை பெற வந்த அனைவருக்கும் உணவு, கட்டணமில்லா பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது.
திமுக மருத்துவ அணி மாநில துணைச் செயலர் மருத்துவர் திலீப்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற முகாமில் மாவட்ட திமுக அவைத்தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ முருகவேல் சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் வேல்முருகன் (முதுகுளத்தூர்), மருத்துவர் சுதர்சன் (ராமநாதபுரம்), முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் ஷாஜஹான், திமுக ஒன்றிய செயலாளர்கள் பூபதி மணி (முதுகுளத்தூர் கிழக்கு), கோவிந்தன் ( முதுகுளத்தூர் மத்தி) ஆறுமுகவேல் ( கடலாடி), குலாம் மைதீன் (சாயல்குடி கிழக்கு), ஜெயபாலன் (சாயல்குடி மேற்கு),
இதம்பாடல் ஊராட்சி மன்றத்தலைவர் மங்களசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.