ஈரோடு நவ. 16 பெருந்துறை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் த.ராஜ கோபால் சுன்கரா இயல்பு தணிக்கை மேற்கொண்டு, பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் தன்பதிவேடு, முன்கொணர் தன்பதிவேடு, பட்டா, இ-பட்டா, முதியோர் உதவித்தொகை, கனிமம் தொடர்பான கோப்புகள், வழக்கு பதிவேடு, நீண்ட கால நிலுவையில் உள்ள அலுவலக கோப்புகள் உள்ளிட்ட முக்கிய அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோரிக்கை மனுக்கள் குறித்த பதிவேடு, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கோரிக்கை மனுக்கள் குறித்த பதிவேடு, குடிமைப் பொருள், சமூக பாதுகாப்பு திட்டம், கோட்ட கலால், நில அளவை பிரிவு, பதிவறை, கோட்ட புள்ளியியல் பிரிவுகளை தணிக்கை செய்தார். மேலும், பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வரும் பதிவறையினையும் பார்வையிட்டு, வட்டாட்சியர் அலுவலக சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது, பெருந்துறை வருவாய் வட்டாட்சியர் செல்வகுமார் உட்பட துறை சார்ந்த அலுலவர்கள் உடன் இருந்தனர்.