நாகர்கோயில் – நவ- 02,
கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள குமரி தந்தை மார்ஷல் நேசமணி திருவுருவ சிலைக்கு கலெக்டர் அழகுமீனா நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் விஜய் வசந்த் எம் பி , பிரின்ஸ் எம்எல்ஏ ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண்ஜெகத் பிரைட், கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜீ ராமகிருஷ்ணன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வ லெட் சுஷ்மா, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் முருகன் , மார்சல் நேசமணியின் மகன் வழி பேரன் ரஞ்சித் , அப்போலோஸ் தமயந்தி நளதம், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.