ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி ஊருக்குள் மழைநீர் புகுந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேருந்து நிலையம் பின்புறம் உள்ளது பரசனேரி , இந்த ஏரி
ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கனமழையால் உடைப்பு ஏற்பட்டு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ட்ராவல்ஸ் வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. அதேபோல் ஊத்தங்கரை திருப்பத்தூர் சாலையில் உள்ள உப்பாரப்பட்டி பாலம் மற்றும் சின்னப்பனரி நிரம்பி சாலையில் தடம் புரண்டு மழை நீர் ஓடியது, இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் நுழைந்ததால் விவசாயிகள் பாதிப்படைந்தனர். அதேபோல் ஊத்தங்கரை திருவண்ணாமலை சாலையில் உள்ள சிங்காரப்பேட்டை ஏரி உடைந்து சாலையில் மழை நீர் ஓடியது,
மேலும் ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர், காமராஜ் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். அவற்றை அறிந்த அரசு அலுவலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு 50க்கும் மேற்பட்ட குடும்பங்களை மீட்டு மண்டபத்தில் முகாமிட்டு தங்க வைத்து உணவு அளித்தனர்.
இது குறித்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த
மாவட்ட ஆட்சியர் கே.எம் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அப்போது
பாம்பாறு அணையில் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது
ஆற்றங்கரையும் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால்
பெற்றோர்கள் குழந்தைகளை நீர் நிலை உள்ள பகுதிகளுக்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள தாழ்வான பகுதிகளுக்கும் செல்ல அனுமதிக்க கூடாது என மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எம் சரயு கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் கனமழை தொடர்பாக தாலுகா அளவில் துணை ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் தலைமையிலான குழுவினர் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் தேங்கியுள்ளதை அகற்றும் பணிகளிலும்
நெடுஞ்சாலை மற்றும் பல்வேறு இடங்களில் வேருடன் சாய்ந்த மரங்களை வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுடன் இணைந்து அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை மற்றும் ஊத்தங்கரை வட்டாட்சியர் திருமால். வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி. உடன் இருந்தனர் மற்றும்
பேரிடர் மீட்பு குழு தீயணைப்பு வீரர்கள் மற்றும் மின்சார துறை காவல் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.