ஊட்டி. பிப்.07.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது. நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் மினி பேருந்துகளுக்கு புதிய நிபந்தனைகளை வெளியிட்டார். மாவட்ட பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களைக் கொண்ட கிராமங்கள், குக்கிராமங்கள், குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு எந்த பாதையும் இணைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் பொருளாதார மற்றும் ஒழுங்கான ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக வெளியிடப்பட்டுள்ளது.
புதிய விரிவான திட்டத்தின்படி 2024 இல் வெளியிடப்பட்டு அமுலுக்கு வருகிறது. மேலும் தமிழ்நாடு மாநிலத்தில் மினி பேருந்துக்கான கட்டண திருத்தம் 01-05- 2025 முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் அதிகபட்ச நீளம் 25 கிலோமீட்டர் ஆக இருக்க வேண்டும் குறைந்தபட்ச சேவை செய்யப்படாத பாதை நீளம் சாலையின் மொத்த பாதை நீளத்தில் 65 மீட்டருக்கு குறைவாக இருக்கக் கூடாது.
தொடக்க புள்ளி முனைய புள்ளி என்பது சேவை செய்யப்படாத குடியிருப்பு கிராமத்தில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும். புள்ளிகளில் ஒன்றே பேருந்து நிறுத்தம் அல்லது பேருந்து நிலையம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும் பழைய மினி பேருந்து திட்டத்தின் கீழ் ஏற்கனவே அனுமதி பெற்ற உரிமையாளர்கள் இந்த புதிய திட்டத்தின் கீழ் மாறுவதற்கு விருப்பத்தினை எழுத்துப்பூர்வமாக அளித்து அனுமதி சீட்டினை சரி செய்யலாம். மேலும் விண்ணப்பிக்கப்படும் புதிய வழித்தடத்தின் சேவை செய்யாத பாதை குறைந்தபட்சம் 1.5 கிலோ மீட்டர் ஆக இருக்க வேண்டும் மினி பேருந்து இருக்கைகள் ஓட்டுநர் நடத்துனர் இருக்கைகள் தவிர்த்து 25க்கு முகாமல் இருக்க வேண்டும். மேலும் மினி பேருந்தின் வீல்பேஷ் 390 சென்டிமீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும். நிலை பேருந்து அல்லது மினி பேருந்து இயக்கப்படாத தடங்கள் அல்லது அதன் ஒரு பகுதியை அல்லது தடங்களில் நாலு தடைகளுக்கு குறைவாக பேருந்துகள் இயக்கப்பட்டு பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யப்படாத நிலையிலும் அத்தடத்தினை சேவை இல்லாத தடமாக எடுத்துக் கொள்ளலாம்.
மாவட்டத்தில் பொதுமக்களின் பிரதிநிதிகள் தனியார் அமைப்புகள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் இடமிருந்து மினி பேருந்துகள் குறித்த புதிய விரிவான திட்டம் 2024 இன் கீழ் வழித்தட வரைபடங்களுடன் கூடிய விண்ணப்பங்கள் மேற்காணும் நிபந்தனைகள் உட்பட்டு வரவேற்கப்படுகிறது. பொதுமக்கள் ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலரிடம் உடனடியாக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.