தஞ்சாவூர் ஜூன் 2
தஞ்சாவூர் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி க்குட்பட்டமன்னார்குடி, திருவையா று, தஞ்சாவூர், ஒரத்தநாடு பட்டுக் கோட்டை ,பேராவூரணி ஆகிய சட்டசபை தொகுதிகளில் வாக்கு கள் பதிவான மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் அனைத்தும் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தொகுதி வாரியாக பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.சுழற்சி முறையில் பாது காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற னர்.
இது தவிர மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு ள்ள அறைகள் மற்றும் கல்லூரி வளாகம் முழுமையாக கண்காணிப் புகேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது கண்காணிப்பு பணிகளை வேட்பாளர்கள் மற்றும் அவர்களது சார்பில் முகவர்கள் கண்காணிப்ப தற்கான அனுமதி வழங்கப்பட்டு ள்ளது .மேலும் தீ தடுப்பு உபகரண ங்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன் 24 மணி நேரமும் தீயணைப்பு வண்டி களுடன் வீரர்களும் தயார் நிலை யில் உள்ளனர்.
வருகின்ற 4 தேதி வாக்கு எண்ணி க்கை நடக்கிறது .இதற்காக மேஜை கள் அமைக்கப்பட்டு முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்ககம்புகளால் ஆன தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன இதற்கிடையில் வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து முன்னேற் பாடுகள் தயார் நிலையில் இருக்கிறதா என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமா ன தீபக் ஜேக்கப் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா மற்றும் தேர்தல் அலுவலர்கள் உடன் இருந்தனர்.