நாகர்கோவில் அக் 20
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து. செயல் அலுவலர்கள். பேரூராட்சி தலைவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா நேற்று கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:-
தமிழ்நாடு முதலமைச்சர் ஊரக பகுதிகள், நகர்ப்புற ஊரக பகுதிகளிலும் அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் செயல்படுத்தபட வேண்டுமென முதலமைச்சரின் கிராமப்புறசாலைகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம். கூட்டுகுடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மிகச்சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
அதன்ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பேரூராட்சிகள் அரசின் திட்டங்களை செயல்படுத்திட அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதிகளை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு பேரூராட்சிகளில் முடிவுற்ற பணிகள், நடைபெற்று வரும் பணிகள் மற்றும் நடைபெறவுள்ள பணிகள் குறித்தும், பணிகளை மேற்கொள்ள தடையாக உள்ள இடர்பாடுகள் குறித்து செயல் அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர்களுக்கான ஆய்வு கூட்டம் நேற்று மேற்கொள்ளப்பட்டது.
நடைபெற்ற ஆய்வுகூட்டத்தில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்டம், தெருநாய்கள் தொந்தரவுகள் குறித்தும், எல் இ டி விளக்கு மற்றும் பேட்டரி ஆட்டோ தொடர்பாகவும், அலங்கார தரை ஓடுகள் அமைத்தல் மற்றும் ஒப்பத்தப்புள்ளி தொடர்பாகவும். நெடுஞ்சாலை துறை சார்பாக சாலைகள் சீரமைத்தல் மற்றும் புதிய சாலைகள் அமைத்தல், கல்வெட்டுகள் சீரமைத்தல் குறித்தும் நீர்வளத்துறை சார்பில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாருவதோடு, தூர்வாரிய தூர்மண்களை அப்புறப்படுத்துதல். மின்சார வாரியம் சார்பில் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்கவும். தேவையான புதிய தெரு விளக்குகள் அமைத்திடவும், பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி சீரான மின்சாரம் கிடைப்பது குறித்தும், மஸ்தூர், பரப்புரையாளர்கள் மற்றும் திடக்கழிவு மற்றும் பேரூராட்சிக்கு தேவையான வாகனங்கள் தொடர்பாகவும் அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பேரூராட்சிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் செயல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை பணியிடை மாற்றுவது குறித்தும், அனைவருக்கும் வீடு திட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருத்தும் வீடுகள் கிடைக்கப்பெறாத பொதுமக்களுக்கு வீடுகள் கிடைத்திட வழிசெய்யும் வகையில் அவற்றில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து களைந்திட வேண்டுமெனவும், பிறப்பு இறப்பு அலுவலகங்களில் உள்ள குறைபாடுகள் குறித்தும். பேரூராட்சிகளின் வளர்ச்சி தொடர்பாகவும் தேவைகள் குறித்தும் பேரூராட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். பேரூராட்சி தலைவர்களின் கோரிக்கையின் தன்மையினை ஆராய்ந்து உரிய நடவடிக்கைள் மேற்கொண்டு, வளர்ச்சி திட்டப்பணிகள் தடையின்றி செயல்படுத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் செயல் அலுவலர்கள் அந்தந்த பேரூராட்சிகளில் தாங்களே சரிசெய்ய கூடிய பிரச்சனைகளை விரைந்து சரிசெய்திடவும், தங்களால் முடியாத பிரச்சனைகளை உயர் அலுவலர்களுக்கு தெரிவித்து அதற்கான தீர்வுகள் காண வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் இப்பணிகளில் ஏதேனும் இடர்பாடுகள் இருப்பின் அவற்றை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தெரிவிக்கும் பட்சத்தில், இடர்பாடுகளின் தன்மை குறித்து
ஆராய்ந்து தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும். இவ்வாறு
அவர் தெரிவித்தார்.