திருப்புவனம்:டிச:09
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சியில் 1 வது வார்டு பகுதியான வைகையாற்றின் கரையோரம் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் வைகையாற்று பிரமனூர் கால்வாயில் நீர்வரத்து அதிகரிப்பின்காரணமாக கால்வாய் பக்கவாட்டு சுவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் சுமார் 5 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி இரவிக்குமார் முதற்கட்டமாக இரவோடு இரவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி திருப்புவனம் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்தார். மற்றும் சாய்ந்த வீடுகளை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர். ஆபத்தான நிலையில் ஆற்றங்கரையில் இருக்கும் பத்திற்கு மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கவும் முடிவு செய்தனர். மாவட்ட நிர்வாகத்திடம் பேசி பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 சென்ட் மாற்று இடம் தருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் வருகின்ற புதன்கிழமை இடத்திற்கான பட்டா வழங்கப்படும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.