கோவை ஜன:27
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் அவர்கள் கடந்த அக்டோபர் மாதம் தனது கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியும், தொடர்ந்து தமிழகத்தில் நிலவி வரும் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார். அடுத்த கட்டமாக தனது கட்சியில் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் முக்கிய பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார்.
அந்த வகையில் கோவை தெற்கு மாவட்ட கழகச் செயலாளராக கே. விக்னேஷ் என்பவரை நியமித்துள்ளார். இவர் பல்வேறு சேவைகளை செய்து வருவதும், கட்சியினரை அன்போடு அரவணைக்கும் பண்புடையவர் என அனைவராலும் பாராட்டி வருகின்றனர்.
நியமனத்தை தொடர்ந்து கோவை தெற்கு மாவட்டம் சார்பில் ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்குதல், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன