நாகர்கோவில் அக் 1
குமரி மாவட்டம் சுசீந்திரம் நான்கு வழிச்சாலை தாண்டி நல்லூர் செல்லும் சாலையில் தென்னந்தோப்பு உள்ளது. திடீரென ஏற்பட்ட மழை காற்றில் தென்னை மரம் முறிந்து அந்த வழியாக சென்ற உயர் மின் கம்பி மீது விழுந்தது. இதனால் அருகே இருந்த மின் கம்பமும் சேதமடைந்தது இது குறித்து பொதுமக்கள் சுசீந்திரம் மின்சார வாரியத்திற்கு தகவல் அளித்தனர். பொதுமக்களில் தகவலின் பெயரில் இளநிலை மின் பொறியாளர் பெருமாள் உடனடியாக அந்த மின்கம்பத்தையும் மின் கம்பிகளையும் சரி செய்யும் பொருட்டு மின் ஊழியர்களை அழைத்து வந்து இரவோடு இரவாக மின் கம்பத்தையும் உயர் மின் கம்பியையும் சரி செய்தார். உடனடியாக நடவடிக்கை எடுத்ததால் உயிர் சேதங்களும் ஏற்படாமல் காப்பாற்றப்பட்டது. உடனடியாக துரித நடவடிக்கை எடுத்த மின்சார வாரியத்திற்க்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.