தென்தாமரைகுளம்., நவ. 30.
குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் தென்னை உற்பத்தியாளர்களின் 10-வது ஆண்டு பொதுகுழு கூட்டம் முகிலன்குடியிருப்பு சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் எஸ். முத்துராஜ் தலைமை வகித்தார். சங்கத்தின் செயலாளர் தங்க சுவாமி மற்றும் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அகஸ்தீஸ்வரம் வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலர் சிமான் சனா, உதவி தோட்டக்கலை துறை அலுவலர் நளினிஆகியோர் கலந்து கொண்டு தென்னை விவசாயத்தின் நவீன தொழில்நுட்பங்கள் குறித்தும், தென்னையை தாக்கும் நோய்கள் குறித்தும் அதன் தீர்வுகள் பற்றியும் விளக்கம் அளித்தனர். கூட்டத்தில் சங்கம் சார்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் சங்கத் துணைத் தலைவர் தாணுமாலைய பெருமாள் நன்றி கூறினார். கூட்டத்தில் திரளான தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.