உடன்குடி ஜூலை 27
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரத்தில்.மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி உடன்குடி ஒன்றியம் மெஞ்ஞானபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியர் விக்னேஸ்வரன் கலந்து கொண்டு
பொது மக்கள் வழங்கிய 700 க்கும் மேற்பட்ட
மனுக்களை பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் மெஞ்ஞானபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் கிருபா ராஜபிரபு, லட்சுமிபுரம் பஞ்சாயத்து தலைவர் ஆதி லிங்கம் செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன் வெங்கட்ராமானுஜபுரம் பஞ்சாயத்து தலைவர் பால சரஸ்வதி துணைத் தலைவர் ராஜ்குமார், உடன்குடி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முக விஜயன், உடன்குடி மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளர் விஜயா மற்றும் ஊராட்சி மன்ற அலுவலர்கள் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்த முகாமில்
பெறப்பட்ட 700 க்கும் மேற்பட்ட விண்ணப்ப மனுக்களில் தகுதியான மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்படும் என துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.