அச்சுந்தன்வயல் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
6 ஊராட்சிகள் மக்கள் பங்கேற்கும் வகையில் தலைவர் சசிகலா லிங்கம் சிறப்பான ஏற்பாடு
ராமநாதபுரம், ஜுலை 26-
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் அச்சுதன் வயல் ஊராட்சியில் ஆறு ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் பங்கேற்கும் விதத்தில் மிகப்பிரமாண்டமான மக்களுடன் முதல்வர் திட்ட முகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் சேர்ந்த அச்சுந்தன் வயல், சூரன் கோட்டை, சித்தூர், காவனூர், காருகுடி, ஆகிய ஆறு ஊராட்சிகளை உள்ளடக்கிய அனைத்து கிராமங்கள் சேர்ந்த மக்கள் பங்கேற்கும் வகையில் அச்சுந்தன் வயல் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வருகின்ற 19.9.2024 வரை 76 மையங்களில் நடைபெற உள்ளது. இப் முகாமில் ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் தங்களின் தேவைகள் குறித்து கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம்.
முகாமில் 17 க்கும் மேற்பட்ட அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்று மனுக்களை பெற்று முப்பது தினங்களுக்குள் ஊறிய தீர்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் இம்மு முகாமில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்தார்.
முகாமில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தாமரைச்செல்வி, தாசில்தார் சுவாமிநாதன், அச்சுதன் வயல் ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா லிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர். ஆறு ஊராட்சிகள் பங்கேற்ற மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமை அச்சுந்தன் வயல் ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா லிங்கம் ஊராட்சி செயலாளர் பாக்யராஜ் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.