கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பண்ணந்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது
இதில் பாப்பாரப்பட்டி, பணந்தூர், தட்டரஅள்ளி, தாமோதரஅள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடையும் வகையில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. இதனை காவேரிப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தொடங்கி வைத்தாரனர் முகாமில், பொதுமக்கள் இடம் இருந்து புதிய மின் இணைப்பு, மின் கட்டணம் மாற்றங்கள், மின் இணைப்பு பெயர் மாற்றங்கள், கூடுதல் மின்சுமை கட்டணங்கள், வருவாய்த்துறை சார்பில் பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு இணை வழி பட்டா நில அளவீடு, வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் வழங்க கோரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இந்த முகாமில் பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,தகுதியற்ற மனுக்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர. இந்த நிகழ்ச்சியில் பாப்பாரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி சங்கர், பண்ணந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ, தட்டரஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், தாமோதரஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா முருகேசன், கவுன்சிலர்கள் வடிவேல், திருப்பதி, சேகர், வட்டாட்சியர்கள். மகேந்திரன். கங்கை, ரஹ்மத்துல்லா, கணேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, பாரதி, வினோத், கோவிந்தம்மாள், சிவப்பிரபு,ஊராட்சி செயலாளர்கள் தென்னரசு, சீனிவாசன், ஆனந்தன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சித் துணைத் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்