கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரைக்குட்பட்ட திட்ட முகாமில் ஒன்றிய குழு தலைவர் உஷாராணி குமரேசன் தலைமையில் வட்டாட்சியர் திருமால், வட்டார வளர்ச்சி, அலுவலர்கள் பாலாஜி தவமணி, சிங்காரப்பேட்டை காவல் ஆய்வாளர் சந்திரகுமார், கோவிந்தாபுரம் ஊராட்சி மன்ற கோவிந்தம்மாள் பெருமாள், மகனூர் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கலில், தள்ளபாடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜாமணி அருணகிரி, கீழ்மத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், எக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். மகனூர்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இத்திட்டத்தின் மூலம் மின்சார வாரியம், குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, காவல் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் துறை, ஆதிதிராவிடர் /பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகள், வாழ்வாதார கடன் உதவிகள் போன்ற துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர் .
இதில் அப்பகுதி ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் ஆயிரக்கணக்கான கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்துள்ளனர் இதில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் மனுக்கள் கணினி வழியாக பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள பதிவு செய்யப்பட்டது துறை சார்ந்த அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டதால் மக்களின் நேரடி பார்வையில் அதிகாரிகளின் செயல்பாடுகள் இருந்தன இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.