கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் துரைஸ் மஹாலில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் தீயில் கருகி நாசம்ஆனது.
தங்கதுரை என்பவருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் வடிவேல் என்பவர் வெளி மாநிலங்களில் கர்நாடகா மகராஷ்டிரா குஜராத் ஆகிய கம்பெனி இருந்து மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கி குடோனாக பயன்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது
இதில் விலைமதிப்புள்ள பேண்ட்கள் சார்ட்கள் புடவைகள் உள்ளிட்டவை அனைத்தும் மொத்தமாகவும் சிலரையாகவும் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த குடோன் முற்றிலும் தீக்கிரையானது
இதில் பல மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர் பர்கூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது