ஆம்பூர்:நவ:23, திருப்பத்தூர் மாவட்டம்
ஆம்பூர் அருகே தேவலாபுரம் அருள்மிகு திருமலை திருப்பதி கெங்கையம்மன் ஆலய மண்டபத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து 10 நாள் நடத்தும் புத்தகம் கண் காட்சி திறப்பு விழா நடைபெற்றது. பின்னர் பத்தாவது நாள் நிறைவிழா முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பொறுப்பாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களை கௌரவித்து பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு அனைவருக்கும் வழங்கினர். நிகழ்ச்சியில் அறிவியல் இயக்க முக்கிய நிர்வாகிகள் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் சி.குணசேகரன் தலைமையில் மாநில ஒருங் கிணைப்பர்.எஸ். சுப்பிரமணி மற்றும் பி.ஜெயசுதா உதயகுமார் என்.சபாரத்தினம், எழிலரசன் ரமேஷ்,இசைத் தமிழ் ரீனா பழனி, சுபஸ்ரீ,வளர்மதி, முருகன், சத்தியமூர்த்தி, எம்.சிலுப்பன்,அச்சுதன்,பழனிவேல், ஷர்மிளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.