சென்னை , அக்டோபர்- 28, காவேரி மருத்துவமனை மகளிர் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து மிகப்பெரிய இளஞ்சிவப்பு ரிப்பனை உருவாக்கி ஆசியா சாதனை புத்ககம் மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் வெற்றிகரமாக இடம் பெற்றனர்.
சென்னை வடபழனி காவேரி மருத்துவமனையில் தொடங்கிய இப்பைக்கத் தான் பேரணி நந்தனம் ஒய்.எம்.சி .ஏ மைதானத்தில் நிறைவடைந்தது.
இதில் 250 பைக் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர், பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ்குமார், காவேரி குழும மருத்துவமனைகளின் இணை நிறுவனரும் செயல் இயக்குனருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ், மற்றும் காவேரி மருத்துவமனை ஆழ்வார்பேட்டை மூத்த ஆலோசகர், இயக்குனர் டாக்டர் ஏ .என். வைத்தீஸ்வரன், நிவேதா ஜெசிகா ஆகியோர் கலந்துகொண்டனர்.
டாக்டர் என். வைத்தீஸ்வரன் கூறுகையில் “தற்போது தென்னிந்திய நகர்ப்புறங்களில் 28 பெண்களில் ஒருவரை மார்பகப் புற்றுநோய் தாக்குவதால், விழிப்புணர்வு மற்றும் முன்கூட்டியே கண்டறிதல் மிகவும் முக்கியமானது என்பதை அவர்கள் அறியாதவர்களாக உள்ளனர். இந்த பேரணி போன்ற முன்முயற்சிகள் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதை முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளோம்.
இதன் வாயிலாக பெண்கள் தகவலறிந்து, பரிசோதனை செய்து, அவர்களின் நல்வாழ்வைப் பெறுவதற்கு ஊக்குவிக்கிறோம் என்றார்.