நாகர்கோவில் டிச 2
கன்னியாகுமரி மாவட்டம் வேளிமலை வனச்சரகத்தைச் சார்ந்த சரக பணியாளர்களும், வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளையை சேர்ந்த என் ஜி ஓ -க்களும் சேர்ந்து வேளிமலை வன சரக எல்லைக்குட்பட்ட அழிக்கால் மண்டபம், லெமூர்பீச், ராஜாக்கமங்கலம் துறை கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த தூய்மை பணியின் போது பிளாஸ்டிக் பாட்டில்கள், நெகிழிகள், கண்ணாடி பாட்டில்கள் போன்றவை சேகரம் செய்து கடற்கரை ஒட்டிய மணல் பகுதியில் இருந்ததை முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டது. அப்புறப்படுத்தப்பட்ட கழிவு பொருட்கள் கணபதிபுரம் பேரூராட்சி தலைவரின் அனுமதியின் பேரில் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டது. இறுதியாக தூய்மை பணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வனத்துறை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.