நாகர்கோவில் செப் 17
கன்னியாகுமரி மாவட்டத்தில் தூய்மையான கட்டமைப்பு உருவாக்கும் பொருட்டு, அனைத்து பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்திய அஞ்சல் துறை சார்பில் “Swachhata Hi Seva” (தூய்மையே சேவை) பேரணி நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்திலிருந்து நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி சுமார் 100 தபால் ஊழியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தூய்மையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியானது அஞ்சலக கண்காணிப்பாளர் க. செந்தில் குமார் மேற்பார்வையில் நாகர்கோவில் தலைமை தபால் நிலைய தலைமை அஞ்சலக அதிகாரி சுரேஷ் தலைமையில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்திலிருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி – டவர் சந்திப்பு – வேப்பமூடு சந்திப்பு – வழியாக சென்று மறுபடியும் தலைமை தபால் நிலையம் வந்தடைந்தது. இதேபோல் தக்கலை உபகோட்ட கண்காணிப்பாளர் வசந்தா சிந்து தேவி தலைமையில் தக்கலை தலைமை தபால் நிலையத்திலும் மற்றும் குழித்துறை உபகோட்ட கண்காணிப்பாளர் கண்மனி தலைமையில் குழித்துறை தபால் நிலையத்திலும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.