கடையநல்லூர் நவ 19
கடையநல்லூர் நகராட்சி மேல்நிலை குடிநீர் தொட்டிகள் முழுவதிலும் பறவைகளின் துர்நாற்றம் மிகுந்த எச்சங்கள் பரவி உள்ளதால் பொதுமக்கள் முகம் சுழித்து வருகின்றனர் மேலும் குடிநீர் தொட்டியை உ டன் சுத்தம் செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர்
கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ஆணையர் குடியிருப்பு மற்றும் கிருஷ்ணாபுரம், சந்தை இக்பால் நகர், மேலக்கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நகரின் குடிநீர் சேவை பூர்த்தி செய்யும் பொருட்டு பெரியாற்றுப்படுகையில் இருந்து நீர் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலைத் தொட்டிகளில் சேகரம் செய்து பின் பொதுமக்களுக்காக விநியோகிக்கப்பட்டு வருகிறது இப்படி மேல்நிலைத் தொட்டி அமையப்பெற்றுள்ள இடங்களில் காலகாலமாய் உள்ள மரங்களில் பறவைகள் இரவில் தஞ்சம் அடைந்து வருகிறது இப்படி தஞ்சம் அடைந்து வருகின்ற பறவைகளின் எச்சங்கள் யாவும் மேற்கண்ட மேல்நிலைத் தொட்டி முழுவதும் பரவிக் கிடக்கிறது மேலும் பல்வேறு கிருமிகள் அங்கு பரவும் நிலையுமஅ ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் நகராட்சி மூலம் குறிப்பாக ஆணையர் குடியிருப்பு பகுதிக்குள் நுழையவே முடியாத அளவுக்கு துர்நாற்றம் நிறைந்து காணப்படுகிறது அதே போல் கிருஷ்ணாபுரம் பகுதியிலும் சந்தை ஒட்டி உள்ள அமையப் பெற்றுள்ள தாமிரபரணி சேமிப்பு குடிநீர் கிடங்கிலும் பான்பராக் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை புகைப்பவர்களின் எச்சில்களும் அப்பகுதியில் நிறைந்து காணப்படுகிறது எனவே மக்களுக்கு விநியோகிக்கப் படுகின்ற குடிநீர் சேகரம் செய்யும் மேல்நிலைத் தொட்டிகளை உடனடியாக சுத்தம் செய்து கிருமிநாசினி தெளித்து குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள அந்த தடை செய்யப்பட்ட வளாகத்திற்குள் நகராட்சி மூலம் அள்ளப்படும் குப்பை வாகனங்களை நிறுத்துவதோ குப்பை கொட்டும் உபகரணங்களை வைப்பதை தடை செய்ய வேண்டும் எனவும் நகர சபை நிர்வாக அதிகாரிகளுக்கு பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் மக்களின் உயிரோடு விளையாடாமல் மக்களை நலம் கருதி அசுர வேகத்தில் போர்க்கால அடிப்படையில் மேற்கண்ட மேல்நிலைத் தொட்டிகள அனைத்தையும் சுத்தம் செய்து சுகாதாரமான முறையில் வைத்திருக்க ஊழியர்களை நகராட்சி நிர்வாகத்தை கேட்டுக்கொண்டு அப்பணியை துரித கதியாக செய்ய வேண்டுமென பொதுமக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.