திருவாடனை அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வகுப்பறைகள் மற்றும் கழிப்பிடங்கள் கட்டுவதற்கு நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் ரூபாய் 4.43 கோடி நன்கொடையாக வழங்கிய மார்ட்டின் அறக்கட்டளை நிர்வாகி லீமா ரோஸ் மார்ட்டின் .
திருவாடனை அக்டோபர் 06
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி , அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவற்றிற்கு நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் வகுப்பறை கட்டிடம் கலையரங்கம் சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறைகள் உள்கட்டுமான அமைப்பிற்காக நன்கொடை வேண்டி மாவட்ட ஆட்சியர் மற்றும் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் உறுப்பினர் செயலர் சுதன், பெண்கள் மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் திருவாசகசெல்வி , ஆண்கள் மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் பால்ராஜ் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கதிரவன் ஆகியோர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க
சமுதாயப் பணி மேம்பாட்டுக்காக முழு ஈடுபாட்டுடன் உதவி வரும் மார்டின் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லீமா ரோஸ் மார்ட்டின், ஆட்சியரின் கோரிக்கையை ஏற்று ராமநாதபுரம் மாவட்டத்தின் முதன்மை கல்வி அதிகாரியை தொடர்பு கொண்டு பள்ளிக்கு வேண்டிய கட்டிடப் பணிகளை மேற்கொள்ள உதவுவதாக தெரிவித்தார்.