சிவகங்கை:ஏப்:24
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் செம்மொழி நாள் விழா தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் . இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவல் : தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை செம்மொழி நாளாக சிவகங்கையில் அரசு சார்பில் எதிர்வரும் 03.6.2025 அன்று கொண்டாடப்பட உள்ளது . இந்த விழாவை முன்னிட்டு மாணாக்கர்களுக்கு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது . 11 , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 09.05.2025 அன்றும் , கல்லூரி மாணவர்களுக்கு 10.05.2025 அன்றும் சிவகங்கை மருதுபாண்டி நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது . இதில்பேச்சுப் போட்டிகள் மற்றும் கட்டுரைப் போட்டிகள் இருக்கும் . இந்த போட்டிகளில் பங்கு பெறும் மாணவர்கள் எதிர்வரும் 30.04 .2025 க்குள்
https://tamilvalarchithurai.tn.gov.in .என்ற இணையதளத்தின் வாயிலாகவோ அல்லது சிவகங்கை தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ அணுகி பயன்பெறலாம் . போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளது . இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .