தென்தாமரைகுளம்., டிச. 23.
அஞ்சு கிராமம் அருகே உள்ள நெல்லை மாவட்டம் லெவஞ்சிபுரம் பகுதியில் இயங்கி வரும் கேப் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கல்லூரியின் இயக்குனர் கிருஷ்ணப் பிள்ளையின் வழிகாட்டலின் படி, இணை இயக்குனர் ஐயப்ப கார்த்திக் தலைமையில் கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி என்ஜினியர் ஜே. பி. ரெனின் மற்றும் கல்லூரியின் முதல்வர் டாக்டர் தேவ் ஆர்.நியூலின் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் தலைமை விருந்தினராக கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜூயூஸ் கலந்து கொண்டார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக சமூக சேவகர் டாக்டர் நாகேந்திரன், மகா கவி பாரதி கல்லூரியின் முதல்வர் டாக்டர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் நடனம், ஊமை நாடகம், பாடல், லக்கி ட்ரா போன்ற நிகழ்ச்சிகள் மூலம் விழாவினை சிறப்பித்தனர் . ஆசிரியைகள் ஜெர்லா மற்றும் அயரின் ஷில்பா ஆகியோர் விழாவினை ஒருங்கிணைத்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.