நாகர்கோவில் – டிச- 20,
உலகம் முழுவதும் கொண்டாட படும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 5 நாள்களே இருக்கும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா களைகட்ட தொடங்கியுள்ளது. அந்த வகையில் நேற்று நாகர்கோவில் பகுதியில் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்த 3 கல்லூரி மாணவர்களான ராஜேஷ், அபி, கிஷோர் , ஆகியோர் மததிற்க்கு அப்பாற்ப்பட்டு அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் வகையில் கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்து திறந்த வாகனத்தில் நடனமாடி, சாலையில் பயணித்த பொதுமக்ளுக்கும் , போக்குவரத்து காவலர்கள், பள்ளி , கல்லூரி மாணவ , மாணவிகளுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகள் வழங்கியும் மகிழ்வித்தனர்.