வேலூர்=27
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அடுத்த நெல்வாய் கிராமத்தில் கிறிஸ்துமஸ் பெரு விழாவினை முன்னிட்டு சுயாதீன திருச்சபைகள் பேராயம் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் சுயாதீன திருச்சபைகள் பேராயத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் பேராயர் டாக்டர் எம்.காலேப்கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது. கிறிஸ்துமஸ் பெருவிழாவினையொட்டி நடைபெற்ற கண் மருத்துவ முகாமில் கொண்ட ஏழை எளிய மக்களுக்கு போர்வை மற்றும் புத்தாடைகள் சுமார் 100 க்கும் மேற்ப்படடவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் பேராயத்தின் பொறுப்பாளர் B.அன்புகுமார் .T.நந்த குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் விழாவினை சிறப்பித்தனர்