திருமங்கலம்
மதுரை மாவட்டம்
திருமங்கலத்தில் காமராஜர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் அதிக ஞாபகத் திறன் மூலம் ஒரே மேடையில் 5 மாணாக்கர்கள் சோழன் உலகச் சாதனை படைத்தனர்.
தஞ்சாவூரில் உள்ள யூகே. இன்ஃபோசிஸ் திறன் மேம்பாட்டு பயிற்சி மாணவர்கள் பிரக்னா, இவன்அமித், நீர்த்திகன்ராஜ், அஸ்வின், கயல்நேத்ரா இவர்கள் ஐந்து பேரும் அதிக ஞாபகத்திறன் மூலம் மனப்பாடம் செய்தவற்றை உலகச் சாதனை புத்தக நிறுவனத்தின் முன்னிலையில் சாதனை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிச் செயலாளர் ஜெயக்கொடி முன்னிலை வகித்தார். இவான்அமித் (10வயது) மாணவன் 103 இரசாயன பெயர்களை அதன் பார்முலாவுடன் ஒரு நிமிடம் 12 நொடிகளில் ஒப்பவித்தார். பிரக்னா ( 9 வயது) 155 ஆங்கிலச் சொற்களுக்கு நிகழ்கால இறந்த கால வினைமுற்றுச் சொற்களை இரண்டு நிமிடங்கள் 13 நொடிகளில் கூறி சாதனை படைத்தார். நீத்திகான் ராஜ் (7 வயது) 101 ஆங்கிலச் சொற்களுக்கான எதிர்மறைச் சொற்களை ஐம்பது நொடிகளில் சொல்லி சாதனை படைத்தார். கயல் நேத்ரா (7 வயது) 193 உலக நாடுகளின் பெயர்களை அவற்றின் நாணயங்களுடன் இரண்டு நிமிடம் மற்றும் 52 நொடிகளில் கூறி சாதனை படைத்தார். அஸ்வின் (5) ஐந்து வரிசைகளை கொண்ட கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளை ஒரு நிமிடம் 13 நொடிகளில் எழுதி சாதனை படைத்தார்.
இந்த முயற்சிகள் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் நீலமேகம் நீமலன், பொதுச் செயலாளர் ஆர்த்திகா நீமலன்,மதுரை மாவட்ட பொதுச் செயலாளர் கராத்தே பால்பாண்டி
தலைமைச் செயற்குழு உறுப்பினர் தமிழ்குமரன் ஆகியோர் முன்னிலையில் இந்த சாதனைகள் நிகழ்த்தப்பட்டது சாதனை நிகழ்த்திய மாணவர்களுக்கு சான்றிதழ் பதக்கம் நினைவுக் கேடையம் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை சௌந்தரி. பள்ளி தலைவர் அமிர்த பாண்டியன், பள்ளியின் பொருளாளர் ராதாகிருஷ்ணன், யூகே இன்போசிஸ் பயிற்சி திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் நிறுவனர் உமா ஆகியோர் உட்பட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உடனிருந்தனர்.