கன்னியாகுமரி டிச 15
குமரி மாவட்டம் மிகவும் பிரசித்தி பெற்ற அஞ்சுகிராமம் ஸ்ரீஅழகிய விநாயகர் ஆலயத்தில் திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை தீபம் ஏற்றும் விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு விநாயகருக்கு பால், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், அரிசிக் கொழுக்கட்டை, மோதகம் உள்ளிட்ட படையல்களுடன் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு நிகழ்வாக கோவில் முன்பு ஆலய நிர்வாக தலைவர் வாரியூர் நடராஜன் தலைமையில், செயலாளர் காணிமடம் தங்க பாண்டியன் ஆசிரியர், பொருளாளர் மேட்டுக்குடி முருகன், செயற்குழு உறுப்பினர்கள் வீடியோகுமார், பரஞ்ஜோதி, அஞ்சைலிங்கம், செல்லத்துரை, சந்திரன், அஞ்சைசுரேஷ் ஆகியோர் முன்னிலையில் ஆலய குருக்கள் கணேசபட்டர் சொக்கப்பனைக்கு பூஜைகள் செய்து தீபத்தை தலைவரிடம் வழங்க அதை வாங்கி தலைவர் நடராஜன் சொக்கப்பனையில் தீபம் ஏற்றினார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அனைவருக்கும் ஆலய குருக்கள் கணேச பட்டர் பிரசாதம் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை அஞ்சுகிராமம் அழகிய விநாயகர் கோவில் நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர். அஞ்சுகிராமம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் லிபி பால்ராஜ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.