ராமநாதபுரம், ஏப்.11-
சித்திரை விஷு கனி தரிசன விழா ரெகுநாதபுரம் ஶ்ரீவல்லபைஐயப்பன் ஆலயத்தில் வரும் 14-04-2025 திங்கட்கிழமை காலை சித்திரை விஷு கனி தரிசன விழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.
விழாவின் தொடக்கமாக அதிகாலை 4:30 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் அஷ்டாபிஷேகம் நடைபெறும். பின்பு கனிகளால் மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும்.
பின்னர் கொலு மண்டபத்தில் அனைத்து வகை பழங்கள் மற்றும் காய்கறிகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். சித்திரை விஷு தினத்தன்று சபரிமலையில் கைநீட்டம் வழங்குவது போலவே இங்கு வந்த அனைத்து பக்தர்களுக்கும் கைநீட்டம் வழங்கப்படும். மேலும் பகல் 12:00 மணியளவில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . விழா ஏற்பாடுகளை ஸ்ரீ வல்லபை அறக்கட்டளை தலைமை குருசாமி மோகன் தலைமையில் நிர்வாகிகள் வெகு சிறப்பாக செய்து வருகின்றனர். இவ்விழாவில் சுவாமிமார்கள் அனைவரும் குடும்ப சகிதம் கலந்து கொண்டு அய்யனின் அருள் பெற அன்புடன் அழைக்கிறோம் என்று தலைமை குருசாமி மோகன் அழைப்பு விடுத்துள்ளார்.