சுசீந்திரம்.ஏப்.22
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் திருக்கோயிலில், சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றம் மே 1 ம் தேதி துவங்குகிறது. இதற்கான விழா கால் நாட்டும் வைபவம் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
இணை ஆணையர் பழனிக்குமார் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், கோயில் ஸ்ரீகாரியம் சேர்மராஜா, திமுக மாவட்ட பிரதிநிதி காந்தி, அணிகளின் துணை அமைப்பாளர்கள் சரத்குமார், சங்கர், நிர்வாகிகள் மணியப்பன், காளிப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.