கோவை ஜூலை:29
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியை ரெப்ரஷ் எல்எல்பி மற்றும் செட்டப் டான்ஸ் கம்பெனியும் இணைந்து நடத்துகின்றன. இந்நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 3ம் தேதி நடக்கிறது.மெலீனா எல்எல்சி இயக்குனர் விக்னா ஸ்டெப் அப் டான்ஸ் கம்பெனி எம் டி
ரோஷினி எம்சீ ரியா எல்எல்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் புவனா நக்குல் கார்ப்பரேட் பயிற்சியாளர் செலின் பெர்ஃப்யூம் நிறுவனர்
கிரேசி செலின்.
குடும்பத்தினருடன் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் பெண்கள் தொழில் முனைவோர் இளம் நடன கலைஞர்கள் கல்லூரி மாணவ மாணவியர் தங்கள் திறமையை வெளிப்படுத்துகின்றனர்.
தொடர்ந்து நடக்கும் கண்காட்சியில் உணவு காமெடி ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கான ஆடை அணிகலன் அணி வகுப்புகள் சமையல் போட்டிகள் நடன நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏழை எளிய மாணவ மாணவியருக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த உதவிகள் அவர்கள் கல்வி முடியும் வரை தொடர்ந்து வழங்கப்படும்.