ஆரல்வாய்மொழி நவ 15
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தாணுமாலயன்புதூர் அரசு தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தோவாளை தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளரும்,ஆரல்வாய்மொழி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவருமான முத்துக்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.பின்பு பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.