திண்டுக்கல்
ஜுலை :03
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஒன்றிய அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஸ்வேதாராணி தலைமை தாங்கினார்.
ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு பிரதிநிதி ஜெபான், ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர்கள் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சந்திரலேகா, தொழிலாளர் நலத்துறை அலுவலர் சரவணமுத்து மற்றும் அமைதி அறக்கட்டளையின் தலைவர் பொறியாளர் ரூபபாலன் மற்றும் பணியாளர்கள் கூட்டத்திற்கு சிறப்புரையாற்றினார்கள்.
குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாத்தல், குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தல், கல்வியினை இடை நிற்றல் புரிந்த குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்த்தல்,
குழந்தை கடத்தலை தடுத்தல், குழந்தை திருமணம் குறித்து புகார் அளித்து வழக்கு பதிவு செய்தல், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுத்தல், குழந்தை பாதுகாப்பு எண்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள் போதை பொருட்கள் பயன்படுத்துவதை தடுத்தல். போன்ற விழிப்புணர்வுகளை அனைத்து ஊராட்சிகளுக்கும் உட்பட்ட கிராமங்களில் செயல்படுத்துவது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.