ஆம்பூர் :டிச:19, திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சியில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் ஐஎல்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளி பயிலும் மாணவ மாணவியருக்கு கிராம நிர்வாக அலுவலர்.ஜமுனா மற்றும் சிறப்பு அழைப்பாளர்
ஊராட்சி மன்ற தலைவர்.சுவிதா கணேஷ் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் குளோரின் சந்திரசேகர் ஆகியோர் குழந்தைகள் எதிர்கால விளைவுகள் பற்றிய ஆலோசனைகளும் பாதுகாப்புக்கான எதிர்வினைகளும் உள்ள உட்கருத்தும் பகிரப்பட்டன.
இதில் 1098 உதவி மையங்கள் என்
விவரங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
இதில் துணைத் தலைவர்.விஜய் 03வார்டு உறுப்பினர். அண்ணாதுரை ஊராட்சி செயலாளர். பாலகிருஷ்ணன் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.