திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு , திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அமைதி அறக்கட்டளை மற்றும் தொழிலாளர் நலத்துறை இணைந்து திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியில் அனைத்து கடைகள், உணவகம் , ஜவுளி கடைகள் மற்றும் தெருவோரக் குழந்தைகள் மற்றும் குழந்தை தொழிலாளர் கண்டறிதல் ஆய்வு நடைப்பெற்றது. ஆய்வில் குழந்தைகள் பாதுகாப்பு அலகின் புற தொடர்பு பணியாளர் சரஸ்வதி தலைமையில் குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பு உறுப்பினரும் , அமைதி அறக்கட்டளை மேலாளருமான டாக்டர் ஆ.சீனிவாசன், தொழிலாளர் உதவி ஆய்வாளர் வெங்கடாசலபதி ஆகியோர்களின் முன்னிலையிலும் அமைதி அறக்கட்டளை திட்ட ஒருங்கிணைப்பாளர் பவித்ரா, ஒருங்கிணைப்பாளர்கள், ரேணுகாதேவி, சங்கீதா, அன்னபூரணம் , சாந்தா ஷீலா, சமூக நலத்துறை அலுவலர்,
வசந்தா ஊர் நல அலுவலர், செல்வ ராணி சமகிரா சிக்ஷா,
கல்வித்துறை அனுஷா,
முதல் நிலைக் காவலர் தேன்மொழி
, முன்னாள் சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜேசு ராஜாகம் ஆகியோர்கள் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வேலைக்கு அமர்த்த கூடாது என்றும், கடையின் உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.