திண்டுக்கல் மற்றும் பிற மாவட்டங்களில் அமைதி அறக்கட்டளை,சமூக நலத்துறை, காவல்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தொழிலாளர் நலத்துறை இணைந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள், குழந்தைகள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் சமூக பணிகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதன் செயல்பாடுகள் குறித்து அமைதி அறக்கட்டளை மேலாளர் டாக்டர். ஆ.சீனிவாசன் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்
பி.கீதாஜீவன் அவர்களிடம் பணிகள் குறித்து விளக்கி கூறினார்.
உடன் தமிழக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் ந.கயல்விழி செல்வராஜ் அவர்களும் இருந்தார்கள்.