மதுரை ஜூலை 16,
மதுரை மாவட்டம் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் உள்ள சுந்தர் ராஜா தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கு காலை உணவு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் திருக்கோவிலின் துணை ஆணையர்/ செயல் அலுவலர், அறங்காவலர் குழு உறுப்பினர்கள்,வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி துவக்க கல்வி அலுவலர், வளையப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், வார்டு கவுன்சிலர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்