கன்னியாகுமரி, மார்ச்.07
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் தமிழக முதல்வர் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாபெரும் ஒற்றைக் கம்பு சிலம்பாட்ட போட்டி வரும் 8-ம் தேதி சனிக்கிழமை
நாகர்கோவில் இவான்ஸ் பள்ளியில் வைத்து நடத்தப்படுகிறது.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளர் தயாநிதி மாறன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இப்போட்டி நடத்தப்படுகிறது.
இதில் குமரி மாவட்டம் முழுவதிலும் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த விளையாட்டு முறையான சிலம்பத்தில் தனித்திறன் ஒற்றைக்கம்பு பிரிவாகும். இதில் ஒரு மாணவர் சுமார் ஒன்றரை நிமிடம் இடைவிடாமல் சிலம்பத்தை சுற்றி காண்பிக்க வேண்டும். இந்த சுற்று முறையில் அவர் சிலம்பத்தின் ஓரத்தில் பிடித்து படை வீச்சு முறை, இரண்டு கையும் நடுவில் சேர்த்து அலங்கார முறையும், பின்னர் ஒற்றை கையை நடுவில் பிடித்து லட்டு வீச்சியும் ஒன்றரை நிமிடத்தில் செய்து காட்ட வேண்டும்.
நடுவர்களின் மதிப்பெண் அடிப்படையில் மூன்று பரிசுகள் வழங்கப்படும். குமரி கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் அமைப்பாளரும், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் போட்டி நடைபெறுகிறது. போட்டியினை குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோயில் மாநகராட்சி மேயர் மகேஷ் துவக்கி வைக்கிறார். விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை செயலாளர் (பொறுப்பு) தென்காசி பாராளுமன்ற முன்னாள் எம்.பி தனுஷ் குமார் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார்.
சிறப்பு விருந்தினராக குமரி பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு, கழக துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின், முன்னாள் எம்.பி ஹெலன் டேவிட்சன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.