ராமநாதபுரம், ஜுலை 20-
மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பட்டணம் காத்தான் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடைபெற்றது.
மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சியில் தனியார் மகாலில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை மாவட்ட வருவாய் அதிகாரி கோவிந்தராஜுலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரி தெரிவித்ததாவது;
தமிழ்நாடு முதலமைச்சர் ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் கடந்த வாரம் துவங்கப்பட்டு தொடர்ந்து இம் முகாம் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இம் முகாம் நடைபெறுகிறது. இம்முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இம்முகாம் வருகின்ற 19.9.2024 வரை 76 மையங்களில் நடைபெற உள்ளது. இம்முகாம் நடைபெறும்பொழுது அதனைச் சார்ந்த கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்களின் தேவைகள் குறித்து கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன் பெறலாம். இம் முகாமில் 17 க்கும் மேற்பட்ட துறை அலுவலர்கள் பங்கேற்பார்கள். இம் முகாமில் பெறக்கூடிய மனுக்களுக்கு 30 தினங்களுக்குள் ஊரிய தீர்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் இம் முகாம்களில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட வருவாய் அதிகாரி தெரிவித்தார்.
மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பட்டணம் காத்தான் ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மண்டபம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சோமசுந்தரம், சங்கரபாண்டியன், பட்டணம்காத்தான் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் சித்ரா மருது, துணை தலைவர் வினோத், மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ஜி.மருதுபாண்டியன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.