கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட சாமல்பட்டி
நாரலபள்ளி
கேஎட்டி பட்டி அந்தேரிப்பட்டி ஆகிய ஊராட்சியைச் சேர்ந்த
பொதுமக்கள் பன்பெறும் வகையில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கப்பட்டது,
இந்த முகாமில் புதிய மின் இணைப்பு,மின் கட்டணம் மாற்றங்கள்,மின் இணைப்பு பெயர் மாற்றங்கள், கூடுதல் மின்சுமை கட்டணங்கள் ,
வருவாய் துறை சார்பில் பட்டா மாறுதல்,பட்டா உட்பிரிவு இணைய வழி பட்டா நில அளவீடு வாரிசு சான்றிதழ் சாதி சான்றிதழ் போன்ற சேவைகள் மனு வழங்கி முப்பது நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என இந்த மக்கள் குறைதீர் முகாமில் கூறப்படுகிறது,
இந்த முகாமில்
ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயலட்சுமி பெருமாள் ஒன்றிய செயலாளர் கே.ஆர்.கே.நரசிம்மன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்
எஸ்.எஸ்.சங்கர்
குண.வசந்தரசு கலந்து கொண்டு
முகாமை துவக்கி வைத்தனர்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்,
மகேஸ்குமரன்,
ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
ஊராட்சி மன்ற தலைவர்கள் கிருஷ்ணவேணி, வெங்கடேசன், வெள்ளியங்கிரி சசிகலா பெருமாள், சக்கரவர்த்தி,
மற்றும் ஊத்தங்கரை ஊத்தங்கரை வட்டாட்சியர் திருமால் தனி வட்டாட்சியர் பிரதாப் ஊத்தங்கரை துணை வட்டாட்சியர் சாந்தி மின்சார துறை, உதவி செயற்பொறியாளர் சத்திய நாராயணன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், பொன்னுசாமி, ஜனார்த்தனன், உமா, ஜெய்சங்கர் ஊராட்சி செயலாளர்கள் ஆனந்தன், பூபதி, மாதேஷ், மற்றும் மின்சாரத்துறை சுகாதாரத்துறை வேளாண்மை துறை வருவாய் துறை தோட்டக்கலைத் துறை சார்ந்த அலுவலர்களிடம் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக கொடுத்தனர்,